மண்டல் நாயகன் வி.பி.சிங் பற்றி தவறாக எழுதிய
இந்திய டுடே எஸ்.பி (சுனா புனா)க்கு
இடஒதுக்கீட்டால் உரிமைகளைப் பெற்ற எம் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து 10/12/08 அன்று தொல்.திருமாவளவன் தலைமையில் நடந்த சமுகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியையும்,இன்று(12/12/08) நடைபெறும் தமிழக முதல்வர் கலைஞர் கலந்துகொள்ளும், சமுகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியையும் நேரில் காண்பதற்கு திராணி இல்லையென்றாலும் மற்ற ஊடகங்களைப் பார்த்தாவது
எம் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்! இல்லையெனில்
எம் உணர்ச்சிகளை உமக்கு உணர்த்துவோம்.
Friday, December 12, 2008
Tuesday, December 9, 2008
திமிர் பிடித்த இந்திய டுடே
திமிர் பிடித்த இந்திய டுடே இதழில் இட ஒதுக்கீட்டு தலைவன் வீ.பி.சிங் பற்றிய தவறான தகவலை வெளியிட்ட எஸ்.பி (சுனா புனா) வை வன்மையாக கண்டிக்கிறோம்...
தமிழ் மாணவன்
தமிழ் மாணவன்
Friday, December 5, 2008
இந்திய ஜனநாயகம் எங்கே ?
நண்பர்களே,,,,, கடந்த வாரம் மும்பையில் பயங்கரவாதிகள் வெறியாட்டம் ஆடிக்கொண்டிருந்ததை தொலைக்காட்சியில் பார்த்தபோது, எனது ரத்தமே உறைந்துவிடும்போல இருந்தது. காரணம், AK47 வகையான பயங்கரமான ஆயுதங்களைக்கொண்டிருந்த இவர்களை எதிர்க்கப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவலர்கள் கையிலிருந்ததோ பழங்காலத்து வெள்ளையர்காலத்தில் அளிக்கப்பட்ட துப்பாக்கி. இதைக்கொண்டு எந்த நம்பிக்கையிலும், தைரியத்திலும் இந்தப்படையினர் தீவிரவாதிகளை எதிர்கொள்கிறார்கள் என்று என்னைப்போலவே ஆயிரக்கணக்கானவர்கள் வியப்படைந்திருப்பார்கள். விஞ்ஞானம் அபரிமிதமாக வளர்ந்துள்ள இக்காலத்தில், அரசின் பாதுகாப்புத்துறையும், தங்களை முன்னோடியாக்கிக்கொள்ள வேண்டும். காரணம், அரசின் மீது நம்பிக்கை கொண்டுதான் மக்கள் வாழ்கிறார்கள். எல்லா விஷயத்திலும், லஞ்சம், ஊழல், அராஜகம், இடஒதுக்கீடு, சிக்கனம் என்று ஆகிவிட்டால், நாடு மற்றும் மக்களது பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும் என்பதை மும்பைச்சம்பவம் அப்பட்டமாக காட்டிவிட்டது. ஒவ்வொரு சம்பவம் நிகழ்ந்தபின்னும் அரசியல்வாதிகள் அறிக்கை விடுவதும், உதவித்தொகை அறிவிப்பதையும் விட, இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைத்தடுப்பதே சாலச்சிறந்தது. புதிய உளவு அமைப்பை ஏற்படுத்துவதை வரவேற்றாலும், அது வழக்கமான சம்பிரதாயமாக இல்லாமல், உண்மையான ஆபத்தை மனத்தில் கொண்டு செயல்பட அரசு வழிவகை செய்யவேண்டும். முக்கியமாக, இந்த அமைப்புகளுக்கு போதிய முடிவெடுக்கும் அதிகாரம், நிதி, பயிற்சி எல்லாம் வழங்கப்படவேண்டும். மும்பைச்சம்பவத்தால், 4000 கோடி இழப்பு என்பதை அறிகிறோம். இந்தளவு இழப்பதற்கு பதிலாக, சுமார் நூறு கோடியை செலவிட்டு, நாட்டின் பாதுகாப்புக்காக தரமான ஆயுதங்கள், ஹெலிகாப்டர், வாகனங்கள், தகவல் தொடர்புச்சாதனங்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவற்றிற்குச்செலவழிப்பதில் தவறில்லை. எல்லாவற்றிற்கும், ஒருமித்த கருத்து என்று அரசு தப்பிப்பதற்கு பதில், துணிச்சலான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அரசும் அரசியல்வாதிகளும் முன்வரவேண்டும். இது நடக்காதவரையில், நாட்டின் பாதுகாப்பு பயங்கரவாதிகளின் தயவில் இருக்கவேண்டியதே.
நம் உளவுப் பிரிவினரைப் போல மிகவும் மட்டமாக நடத்தப்படும் ஒரு அரசுத் துறை கிடையாது . நம் ஊரில் உளவுப் பிரிவு என்றால் அதன் முக்கியமான வேலை எதிர்க் கட்சிகளை உளவு பார்ப்பதும், முக்கியத் தலைவர்களுக்கு யாராலாவது ஆபத்து வரப் போகிறதா என்பதை கண்டறிவதும் தான்.
ரஜினி அரசியலுக்கு வரப் போகிறார்? யார் யார் சந்திக்க வருகிறார்கள் என்பதை கண்காணிப்பது தான் இவர்களுக்கு வேலை. 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் அந்த வீட்டின் முன்போ, தெரு முனையிலோ நின்று கொண்டிருக்க வேண்டும். இது போன்று தான் அவர்களுக்குத் தரப்பட்ட வேலை. ஒருவர் தனது 8 மணி நேர முடிந்த பின் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்புவார். அப்போது இன்னொரு சைக்கிளில் அடுத்த ஷிப்ட்காரர் வந்துவிடுவார். எக்ஸ்ட்ரா 'வரும்படி' இல்லாத போலீஸ் வேலை இது. இதனால் இவர்களுக்கு ஒரு டிவிஎஸ் 50க்குக் கூட வழியில்லை. மி்ஞ்சியது ஓட்டை சைக்கிள் தான். இது தான் நமது உளவுப் பிரிவின் அப்பட்டமான- உண்மை நிலை. இன்னொரு கொடுமையும் உண்டு. பெரும்பாலும் உளவுப் பிரிவுக்கு மாற்றப்படும் போலீசார் யார் தெரியுமா.. உடல் நலமில்லாதவர்கள், பிஸிகல் பிட்னஸ் இல்லாதவர்கள், ஓட முடியாதவர்கள், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்கள் தான். இவர்களால் இனி போலீஸ் வேலையில் இருக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டால் அவர்கள் மாற்றப்படும் துறை தான் உளவுப் பிரிவு. இப்படிப்பட்ட ஒரு போர்ஸை வைத்துக் கொண்டு தான் நம் நாட்டை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் நமது அரசுகள். இதற்கு மத்திய உளவுப் பிரிவான ஐ.பியும் ஒன்றும் சளைத்தது அல்ல. அங்கும் இதே நிலைமை தான். ஆனால், அவர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் தரப்படுவதும் கொஞ்சம் நவீன கருவிகள் தரப்பட்டுள்ளதும் தான் வித்தியாசம். இந்தக் கருவிகளில் போன் ஒட்டுக் கேட்கும் கருவிகளும் அடக்கம். இது தரப்பட்டது சமூக விரோதிகளை, தேச விரோதிகளை கண்காணிக்க. ஆனால், ஐபி இதைப் பயன்படுத்துவது பெரும்பாலும் எதிர்க் கட்சியினரைக் கண்காணிக்கத் தான்.
இப்படிப்பட்ட ஒரு மட்டமான சிஸ்டத்திலும் கூட ஐபியும் மாநில உளவுப் பிரிவுகளும் இந்த அளவுக்காவது செயல்பட்டுக் கொண்டிருக்கக் காரணம், அதில் கொஞ்சநஞ்சம் மிஞ்சியிருக்கும் மிகச் சிறந்த அதிகாரிகள், ஊழியர்கள், மிகச் சிறந்த மூளைகள், உண்மையிலேயே நாட்டை நேசிக்கும் நல்ல மனமுடையவர்கள் தான். இவர்களும் இல்லாவிட்டால் இந்த உளவுப் பிரிவுகள் என்றோ தனது முழு அர்த்தத்தையும் இழந்திருக்கும். மும்பையில் நடந்திருக்கும் இந்த புதிய வகையான தாக்குதல் இனி வரப் போகும் தாக்குதலுக்கு ஒரு முன்னோடியாகத்தான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். கடல் வழியாக வந்து தாக்குவார்கள் என்று நம்மில் யாருமே கனவு கூட கண்டதில்லை. ஆனால், தீவிரவாதிகள் புதிய புதிய யுத்திகளை கண்டுபிடிப்பதிலும் அமலாக்குவதிலும் எங்கோ போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் உள்ள கருவிகள் மூக்கில் விரலை வைக்க செய்கின்றன. சாட்டிலைட் போன்கள், ஜிபிஎஸ் சிஸ்டம், பிளாக்பெர்ரி மொபைல்கள்... இதையெல்லாம் நமது உளவுப் பிரிவினரில் பெரும்பாலானவர்கள் பார்த்து மட்டுமல்ல, கேள்விப்பட்டது கூட இல்லை. நம் உளவுப் பிரிவினரில் எத்தனை பேருக்கு இன்டர்நெட்டையாவது பயன்படுத்தத் தெரியும்? ஐபி அட்ரஸை காப்பியடித்து போலி ஐபியை உருவாக்கி வேறு ஒருவரின் பெயரால் மெயில் அனுப்புகிறார்கள், வாய்ஸ் ரெகக்னிசன் சாப்ட்வேரை பயன்படுத்துகிறார்கள், போலி கிரெடிட் கார்டுகளை உருவாக்குகிறார்கள், வங்கதேசத்தின் சிம் கார்டை மாற்றியமைத்து லோக்கல் காலில் பேசுகிறார்கள்... ஏகே 47 உள்பட நவீன ரக துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள், கிரனைட்டுகள், படகுகள் இயக்குவது உள்ளிட்ட கடுமையான பயிற்சி என ஒரு கமாண்டோக்கள் அளவுக்குத் தயாராக்கப்பட்டு, மதத்தின் பெயரால் உயிரையும் தர மூளைச் சலவை செய்யப்பட்டு வந்திறங்கும் இவர்கள் நவீன யுக தீவிரவாதிகள். நம் போலீசாரில் பெரும்பாலானவர்களிடம் உள்ள துப்பாக்கி முதலாம் உலகப் போரில் அறிமுகமான .303 ரகத்தைச் சேர்ந்தது. ஒரு குண்டை சுட்டுவிட்டு அடுத்த குண்டை லோட் செய்வதற்குள் தீவிரவாதி நடந்தே அடுத்த தெருவுக்குப் போயிருப்பான். இதை நான் கிண்டலுக்காக எழுதவில்லை. நான் அந்த மனநிலையிலும் இல்லை. நம் இயலாமையை நினைத்து மனம் கணத்துப் போய் இதைச் சொல்கிறேன். என்னைப் போலவே எத்தனையே இந்தியர்கள், இயலாமையால் மனம் வெதும்பியுள்ளனர்.
நமது உளவுப் பிரிவு, போலீஸ் படைகளின் இந்த நிலைமைக்கு அவர்கள் யாரும் காரணமில்லை. நம் அரசியல்வாதிகள் தான் காரணம். நமது பிறப்புச் சான்றிதழைப் பெறுவதில் ஆரம்பிக்கும் லஞ்சம் சுடுகாட்டையும் தாண்டி இறப்புச் சான்றிதழ் பெறுவது வரை தொடர்கிறது. நமது போலீஸ் துறையையும் உளவுப் பிரிவையும் கெடுத்ததில் இந்த ஊழல் லஞ்சத்துக்கு முக்கிய பங்குண்டு. தனிமனித ஓழுக்கம் இல்லை, எப்படி ஜன நாயாகம் ஜெயிக்கும்.எதிலும் லஞ்சம், எங்கும் லஞ்சம், எதற்க்கெடுத்தாலும் லஞ்சம்,Birth certificate வாங்குவதற்கு லஞ்சம்,Death Certificate வாங்குவதற்கு லஞ்சம்,Bank loan வாங்குவதற்கு லஞ்சம்,passport verification வாங்குவதற்கு லஞ்சம்,Gas connection வாங்குவதற்கு லஞ்சம்,EB connection வாங்குவதற்கு லஞ்சம்,Two wheeler license வாங்குவதற்கு லஞ்சம்,house registration வாங்குவதற்கு லஞ்சம்,school admission வாங்குவதற்கு லஞ்சம்,Hospital admission வாங்குவதற்கு லஞ்சம்,Insurance money வாங்குவதற்கு லஞ்சம்,போங்கய்யா வாழ்க்கை வெறுத்து போச்சு.....இப்படி இந்தியா இன்றைக்கு இருக்கும்போது. எப்படி மனசாட்சி இல்லாமல் ஜன நாயகம் வென்றது, ஜன நாயகம் வாழ்க, ஜன நாயகம் இனிக்கிறது என்று சொல்லமுடிகிறது.கேவளம்.... மும்பை போலீசில் மிகச் சிறந்த அதிகாரியான ஹேமந்த் கர்கரேவை பலி கொண்டதில் புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுக்கும் முக்கிய பங்குண்டு. ஆச்சரியமாக இருக்கிறதா..?. மும்பை தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு வாங்கப்பட்ட புல்லட் புரூப் ஜாக்கெட்டுகள் அவ்வளவு மட்டமானவை. இந்த ஜாக்கெட்களும் தலைக் கவசங்களும் தரமானவையாக இல்லை என்று மும்பை போலீசார் தங்களது அரசுக்குத் தெரிவித்தும் அதையே வாங்கியிருக்கிறது அரசு. வேறி வழியில்லாமல் அதைத் தான் அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதை அணிவதற்குப் பதில் சும்மாவே போய் தீவிரவாதிகளை எதிர்கொள்ளலாம் என்று ஹேமந்த் நினைத்தாரோ என்னவோ. முதலில் அதை அணிந்தவர் பின்னர் அதைக் கழற்றிப் போட்டுவிட்டு கையில் பிஸ்டலோடு சென்றவர் தீவிரவாதிகளின் புல்லட்டுக்கு பலியாகிவிடடார்.
முதலில் நம் போலீசாரின் பயிற்சிகளை, ஆயுதங்களை பலப்படுத்துவதும், உளவுப் பிரிவை வலுவாக்குவதுமே இந்த நவீன யுக தீவிரவாதிகளை எதிர்கொள்ள ஒரே வழி. தேசிய அளவில் தீவிரவாதிகளை எதிர்கொள்ள ஒரு பெடரல் ஏஜென்சி உருவாக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்த அமைப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் ?இந்த ஏஜென்சி வெறும் விசாரணை அமைப்பாக இருந்துவிடக் கூடாது. அது உளவு வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டும், கைதுகள் செய்யவும், தாக்குதலை நடத்தவும், சட்டத்தை அமலாக்கவும் அந்த அமைப்புக்கு அதிகாரம் இருக்க வேண்டும். இதற்கு 3 முக்கிய விஷயங்கள் வேண்டும். ஒன்று நிறைய பணம். இரண்டாவது பொலிடிக்கல் வில். மூன்றாவது அரசியல் தலையீடு இல்லாமை. இந்தப் பிரிவில் சேர ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர்களிடம் பரிந்துரை லெட்டர் வாங்கி வர வேண்டும் என்ற நிலைமையோ அல்லது இதில் உள்ள பணியிடங்களை நிரப்பவும் இட ஒதுக்கீடோ வந்துவிடக் கூடாது. மிகச் சிறந்த மூளைகளை, தேசப்பற்று மிக்க இளைஞர்களை இதில் சேர்க்க வேண்டும். இந்த ஏஜென்சி பெயரளவுக்கு இல்லாமல் ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்டிருக்க வேண்டும். நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் ரகசியமாய் ஊடுருவி பரவ வேண்டும். இவர்களுக்கு மிகச் சிறந்த உளவுப் பயிற்சிகள், அதி நவீனக் கருவிகள் தரப்பட வேண்டும். பல மொழி அறிவு கொண்டவர்களாக, சங்கேத-ரகசிய குறியீடுகளை பிரேக் செய்பவர்களாக, எளிதில் மக்களுடன் கலந்துவிடுபவர்களாக இருக்க வேண்டும். அரசியல் தலையீடு இல்லாத ஒரு முழுமையான அதி நவீன உளவு-தாக்குதல் ஏஜென்சி தான் இந்த நாட்டையும் மக்களையும் காக்க முடியும். இல்லாவிட்டால் அப்போதைக்கு நடந்த தீவிரவாதத் தாக்குதலை நினைவூட்டி பிரச்சாரம் செய்து தேர்தல்களில் ஒருவர் மாற்றி ஒருவர் வெல்லலாம்.. வெவ்வேறு கட்சிகள் ஆட்சிக்கு வரலாம், ஆனால் நாடு மெல்ல சிதையும். மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை இழக்கும் நிலை வரும். இதைத் தான் தீவிரவாதம் எதிர்பார்க்கிறது. ஊழலோ, லஞ்சமோ, ஜாதி அரசியலோ, மத அரசியலோ.. என்ன தான் செல்லறித்தாலும் ஜனநாயகம் என்பது இந்தியாவுக்குக் கிடைத்த மாபெரும் ஆயுதம். அந்த ஆயுதம் நம்மிடம் இருக்கும் வரை தான் இத்தனை மாநிலங்களும் இணைந்து நாம் ஒரு நாடாக இருக்க முடியும். ஜனநாயகத்தை இழந்துவிட்டால் நாடு துண்டு துண்டாகும்..
இதற்கு பலியாகாமல் தப்ப தீவிரவாதத்தை நாம் தீவிரமாக, நேருக்கு நேர் எதிர்கொள்வது தான் ஒரே வழி. அதற்கு முதலில் நமது உளவு கட்டமைப்பை வலுப்படுத்துவது மிக மிக மிக அவசியம்.உளவுத்துறையின் இந்த நிலைக்கு காரணம் யார்? இத்துப்போன பழைய துப்பாக்கியை கொடுத்து போராட்டத்துக்கு அனுப்பினால் யாராவது போருக்கு செல்லத் துணிவார்களா? இல்லை அப்படியே நவீன ஆயுதங்கள் கொடுத்தாலும் அவர்களால் சுதந்திரமாக செயல் பட முடியுமா? நாட்டுக்காக உயிர் நீத்த ஒருவருக்கு இரங்கல் செய்தி வெளியிடக் கூட ஒரு முதலமைச்சருக்கு நேரம் இல்லை. எதிர் கட்சிகளில் கூக்குரலுக்கு பிறகு நேரில் வந்து ஆறுதல் கூறும் ஒரு ஸ்டண்ட். கர்நாடகாவில் சர்ச்சுகளின் மீது யார் தாக்குதல் நடத்தினார் என்று கண்டறிய உளவுத்துறை வேண்டும், நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறதென்றால் எதிர்கட்சியினரை கண்காணிக்க உளவுத்துறையினர் வேண்டும், இல்லை ஒவ்வொரு எதிர்க்கட்சி மற்றும் கூட்டணி கட்சியினரின் கூட்டங்களை ஒட்டு கேட்பதற்கு உளவுத்துறையினர் வேண்டும். அப்போது தான் தேவைப் படும் நேரத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன் படுத்தலாம். இப்படி இவர்கள் குப்பை அரசியல் வாதிகளால் செருப்பு போல நடத்தப் படும் பொது எப்படி இவர்கள் மக்களுக்காக செயல் படமுடியும்?அப்படியே ஒருவேளை இவர்கள் வீரமாக செயல் பட்டால் இவர்களை எதிர்த்து குரல் கொடுக்க எதிர் கட்சிகள் மற்றும் ஜாதிக் கட்சிகள் இருக்கின்றதே. பல ஆண்டுகளாக பல அரசாங்கத்தினால் பிடிக்க முடியாத வீரப்பனை திரு விஜய குமார் சுட்டு பிடித்தார் (அல்லது பிடித்து சுட்டார்). இப்போது அவர்எங்கே இருக்கிறார் ? எப்படி நடத்தப் படுகிறார்? இப்படி போராடி பிடித்த பல திருடர்கள் மற்றும் தீவிரவாதிகள் அரசியல் காரணத்தாலோ, பிணைக் கைதி மிரட்டல் களாலோ விடுவிக்கப் பட்ட பல நிகழ்வுகள் இங்கு உண்டு.முதலில் இவர்கள் அரசியவாதிகளால் நடத்தப் படுவது கூடாது. அதன் பிறகு இவர்களில் சேவையை நல்ல முறையில் மதிக்கப் படவேண்டும். இன்று ராஜ் தாக்கரே ,பால் தாக்கரே மற்றும் காடுவெட்டி குருவை தெரிந்த அளவுக்கு கார்கில் போரில் உயிர் நீத்தவர்கள் பெயர் கூட தெரியாது. ஒருவருடைய தியாகங்கள் மதிக்கப் படும் வரை, பாதுகாப்பு துறைகள் (காவல், உளவு மற்றும் இராணுவம்) சுதந்திரமாக செயல் படும் வரையில் இதே நிலைதான் தொடரும்.
சகித்துக் கொள்ள முடியாமல்
உங்களில் ஒருவன்.
(எமக்கு வந்த மின்னஞ்சலிலிருந்து...)

Subscribe to:
Posts (Atom)